Date:

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

அதன்படி 0 – 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.

இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது.

மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

61 – 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...