Date:

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்ல ‘சுஹுருபாய’ தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு ஒருநாள் சேவையின் கீழ் வருகை தந்து, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம், நாளை (30) ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட அந்த விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் உரிய அலுவலகங்களுக்கு வருகை தந்து தமது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழமை போன்று ஒருநாள் சேவை இடம்பெறும்

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைத் தகவல் உறுதிப்படுத்தல் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை முன்வரிசை அலுவலகச் செயற்பாடுகள் எதிர்வரும் 2026 ஏப்ரல் 06-ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர் அனைத்துச் சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை…

ஈரானில் கிளர்ச்சியைத் தூண்ட நினைத்த முயற்சிக்கு மாறாக, இன்று அமெரிக்காவின் சொந்த...