தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை (23) அன்று புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமானம் விழுந்த இடத்தில் கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது






