நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச நிறுவனத் தலைவர்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அரச அதிகாரிகள் தமது கடமைகளுக்கு தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து பொது போக்குவரத்து அல்லது குழுவாக இணைந்து பயணிக்கும் முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிக்கள கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நாளாந்த போக்குவரத்துத் திட்டங்களை தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* மின்சார பயன்பாட்டை குறைப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
* அலுவலகங்களில் மின்விளக்குகளுக்குப் பதிலாக இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து மின்விசிறிகளை பயன்படுத்தல்
* அவசியமற்ற நேரங்களில் மின்தூக்கிகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசியமற்ற நேரங்களில் வீதி விளக்குகளை அணைத்தல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் தற்காலிகமாக அவற்றை செயலிழக்கச் செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.






