Date:

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.

எமது பிரதான இலக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாகும். அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மின்சார நுகர்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சில மாதங்களில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கும். நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை குறித்து நாம் ஆராய்வோம்.

எவ்வாறாயினும், எமது எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும். உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்தும் விலை அதிகரித்துள்ளன. மறுபுறம், இவ்வாறானதொரு சூழலில் நாம் கோரும் டெண்டர்களில் சாதாரண காலங்களில் கிடைக்கும் விலைகள் கிடைப்பதில்லை.

எனவே, எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...