Date:

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமை பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

சாதாரண நடைமுறைக்கு அமைவாக ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் மூடப்படுவது வழமையாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டே சனிக்கிழமை கூட்டுத்தாபனம் மூடப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், தற்போதுள்ள விசேட தேவை மற்றும் சனிக்கிழமை இரவு QR குறியீடு (QR Code) மீளமைக்கப்பட உள்ளதால், அன்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் திறந்திருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், தேவை ஏற்படின் ஞாயிற்றுக்கிழமையிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

இதேவேளை, மொத்த களஞ்சிய முனைய நிறுவனமும் சனிக்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதன் காரணமாக நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவது குறித்து எந்த அறிவித்தலோ அல்லது தீர்மானமோ எடுக்கப்படவில்லை என்றும் முகாமை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...