கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண தரம் மற்றும் 90/91 உயர்தர முன்னாள் மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நாட்டியப் பயிற்சி கலையரங்கம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.


பாடசாலை தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், “கல்வி ஒளி பரப்பி, கலை வளர்த்து, மரபை மகிமைப்படுத்துவோம்” எனும் நோக்கோடும், கலைப் பாரம்பரியத்தைப் பேணும் முகமாகவும் முன்னாள் மாணவர்களால் இக்கலையரங்க நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு. மூ. மூவேந்தன், முன்னாள் அதிபர் திருமதி எஸ். பாலசுந்தரம், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






