Date:

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் நேற்று (13) தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்ததாக, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) எனும் ஈரானியப் போர்க்கப்பலின் பணியாளர்களை மீட்பதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இதன்போது அராக்சி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், உயிரிழந்த 84 பணியாளர்களின் சடலங்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமைக்காகவும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இதேவேளை, இரு வெளிவிவகார அமைச்சர்களும் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...