மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13) ஈரான் நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலின் பல நகரங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இன்று அதிகாலை முதல் மாலை வரை சுமார் 6 கட்டங்களாக (Waves) இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது.
தூக்கத்தை இழந்த டெல் அவிவ்
இன்று இரவு டெல் அவிவ் நகர் மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் இடைவிடாமல் அபாயச் சங்குகள் (Sirens) முழங்கின. ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி நகருக்குள் விழுந்து வெடித்ததில் பல இடங்களில் பாரிய தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஹோலோன் (Holon) மற்றும் ரிஷோன் லெட்சியோன் (Rishon Lezion) பகுதிகளில் உள்ள குடியிருப்புக்கள் மற்றும் பாடசாலைகள் மீது ஏவுகணைத் துண்டுகள் விழுந்துள்ளதால் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.
கொத்து வெடிகுண்டுகள் (Cluster Bombs)
ஈரான் இன்று பயன்படுத்திய ஏவுகணைகளில் ‘கொத்து வெடிகுண்டுகள்’ (Cluster Bombs) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இஸ்ரேலிய இராணுவ ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் ஒரு ஏவுகணை வெடிக்கும் போது அது பல சிறு வெடிகுண்டுகளாகச் சிதறி ஒரு பெரிய பரப்பளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. “டெல் அவிவ் நகரின் வானமே நெருப்புப் பிழம்பாகக் காட்சியளித்தது” என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்பு விபரங்கள்
இன்றைய அதிகாலைத் தாக்குதலில் மட்டும் சுமார் 58 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சிகிச்சை பிரிவான ‘மேகன் டேவிட் அடோம்’ (MDA) தெரிவித்துள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் நிலத்தடிப் புகலிடங்களிலேயே (Shelters) கழிக்க வேண்டியிருந்ததால், இஸ்ரேலியர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
#Tubetamil24X7 #Tubetamil #IsraelUnderAttack #TelAvivBombing #IranWar2026 #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #OperationEpicFury #TamilNewsToday






