Date:

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க விற்பனை நிலவரப்படி,

22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 377,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அமெரிக்க – இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது.

கடந்த வார ஆரம்பித்தில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 388,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 408,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் பவுன் ஒன்று 420,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சுமார் 2000 ரூபாவினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றைய தினம் 5090 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...