Date:

‘இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தவில்லை’

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கடற்படை, தங்களது துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

 

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர், ‘ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்’ என்ற ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போதைய மோதல் சூழலில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்தத் தகவலை பொய்யானது மற்றும் முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துகளைப் பொதுமக்கள் நம்பக் கூடாது என எச்சரித்துள்ளது.

 

இந்தியாவில் நடைபெற்ற இராணுவப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிய ஈரானியப் போர்க்கப்பல் மீது, இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித...

அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப்...

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது...

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...