Date:

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து அரசின் நிலைப்பாட்டை கூறிய ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய ஆயுதத் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு வரும் உலகில் இது எவ்வளவு அழிவுகரமானது என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். 

எனவே, இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...

Breaking போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்...