Date:

கத்தார் பாதுகாப்பு நிலை தொடர்பான சமீபத்திய தகவல்

கத்தார் தற்போது ஆரம்ப கட்ட அவசர நிலையை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 48 மணி நேரமாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுக்க Patriot பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இவ்வாறு தடுக்கும் போது, கீழே விழும் சிதைவுகள் காரணமாக அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், டோஹா நகரத்தின் மீது ஏவுகணைகளை தடுக்குவதற்கு பதிலாக, வளைகுடா கடல் பகுதிக்குப் மேல் அவற்றை சுட்டு வீழ்த்தும் நோக்கில் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய டோஹாவில் கடந்த 10 மணி நேரமாக நிலைமையை கண்காணித்து வந்த நிலையில், எந்த வெடிப்பு சத்தமும் கேட்கப்படவில்லை. சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தற்போது வெடிப்புகள் தொலைவில் நடைபெறுகின்றன என்றும் நிலைமை சற்றே அமைதியாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீண் அச்சம் வேண்டாம்: குவைத் வாழ் இலங்கையர்களுக்குத் தூதுவர் அறிவிப்பு!

  குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டிற்கான இலங்கைத்...

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப்...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...