Date:

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சவூதி அரேபிய அதிகாரிகள், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்கும் உத்தியோகபூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், கடவுச்சீட்டு மற்றும் வதிவிட அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் செல்லுபடியாவதை உறுதி செய்து, அவற்றை எளிதில் அணுகக்கூடிய வகையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பும் நலனுமே தூதரகத்தின் முதன்மையான இலக்காகும்.

அவசர தொடர்புகளுக்கு (24 மணிநேர சேவை): தொலைபேசி எண்கள்: +966 54 947 7567, +966 56 982 2700

WhatsApp / IMO (தகவல்களுக்கு மட்டும்): +966 56 975 3380

மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk

மேலதிக தகவல்களுக்குத் தூதரகத்தின் இணையதளம், Facebook, Instagram, X மற்றும் தூதரகத்தின் WhatsApp ஆகிய சமூக ஊடகங்களை பின்தொடருமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின்...

எரிபொருளை சேமிக்கத் தொடங்கினால் மீண்டும் QR

பொதுமக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR...

தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத்...

உலகை அச்சுறுத்தும் தாக்குதல்: ஐ.நா. எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த...