Date:

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டல்கள் பின்வருமாறு: சவூதி அரேபிய அதிகாரிகள், ரியாத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சுல் ஜெனரல் அலுவலகம் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்பவும்.

கடவுச்சீட்டு (Passport) மற்றும் வதிவிட அடையாள அட்டை (Iqama) போன்ற முக்கிய ஆவணங்கள் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வதுடன், அவற்றை எப்போதும் எளிதில் எடுக்கும் வகையில் வைத்திருக்கவும்.

தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், Facebook, Instagram, X மற்றும் WhatsApp குழுக்களைத் தொடர்ந்து அவதானிக்கவும்.

உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும். பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

 அவசர தொடர்பு எண்கள் (24 மணி நேர சேவை) ஏதேனும் அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம்:

  • நேரடி அழைப்புகள்: +966 54 947 7567 / +966 56 982 2700

  • WhatsApp / IMO (செய்திகளுக்கு மட்டும்): +966 56 975 3380

  • மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk

மேலதிக தகவல்களுக்கு: ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் சமூக வலைதளப் பக்கங்களை உடனுக்குடன் பின்தொடரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...

#BREAKING | குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்! #TamilNews | #Iran | #KuwaitAirport | #Israel

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்...

தோஹா, கட்டார் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து தோஹா, கட்டாரில்...

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்??

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...