Date:

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டின் கூரை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியதுடன், பின்னர் வீட்டிற்கு முன்னால் மற்றுமொரு பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர்.

கூரையின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்ததில், கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

மற்றைய பெற்றோல் குண்டு வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வீட்டில் வசிப்பவர்களில் ஒருவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிகப் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...

Breaking ஈஸ்டர் தாக்குதல்! – அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...