Date:

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காணப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அது குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றார்.

கைதுக்கான காரணத்தை சில மணி நேரங்களுக்குள் வெளிப்படுத்துவது கடினம் எனக் குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸார் தமது கடமையை முறையாகச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை...