முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.
அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது






