Date:

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24ஆம் திகதிக்கு  ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.

வழக்கின் சாட்சி விசாரணை நடைபெறவிருந்த போதிலும், சட்டத்தரணிகளின் பணிபகிஸ்கரிப்பால் விசாரணை இவ்வாறு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் பத்தரமுல்லையில் வைத்து N.50191386 எனும் இலக்கமுடைய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர...