உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் அனைத்து டிக்கட்டுக்களும் தற்போது விற்றுத் தீர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் டிக்கட்டை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி இரவு 7 மணிக்கு பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த மைதானத்தில் 35,000 ரசிகர்கள் இருந்து போட்டியை பார்வையிடுவதற்கான வசதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது






