Date:

குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமைப் போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன.

குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...