Date:

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய அவர்,

மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

மின் அலகு ஒன்றின் உற்பத்திச் செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையே காணப்படுகிறது.

நாம் நாட்டினைப் பொறுப்பேற்கும் போது மின் அலகு ஒன்றின் கொள்வனவு அல்லது உற்பத்திச் செலவு 37 ரூபாவாக இருந்தது.

தற்போது அதனை 29 ரூபாவாக, அதாவது 22 சதவீதத்தினால் குறைக்க எம்மால் முடிந்துள்ளது. எமது இலக்கு அந்தப் பெறுமதியை 25 ரூபாவாகக் குறைப்பதாகும்.

அதனைச் செய்து, வாக்குறுதி அளித்தவாறு 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுப்போம்  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...