Date:

1948ஆம் ஆண்டு சுதந்திரம்: புதிய தேசமாக உருவெடுத்த இலங்கை – இல்ஹாம் மரைக்கார்

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுசுயாதீனமான ஒரு நாடாக இலங்கை உருவெடுத்தது.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தின் 78 ஆண்டுகளை நாம் இன்று பெருமையுடன் நினைவுகூருகிறோம் என்று அமேசான் கேம்பஸ் மற்றும் அமேசான் காலேஜ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்துள்ளார்.

78வது சுதந்திர தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் என்பது வெறும் உரிமை மட்டுமல்ல; அது பொறுப்பு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையையும் நமக்கு நினைவூட்டும் ஒரு உயரிய பெறுமதியாகும்.

இந்நாளில், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து,அமைதி, நல்லிணக்கம், சமூக நீதி மற்றும்நிலையான அபிவிருத்தி ஆகிய இலக்குகளைக் கொண்டு நாட்டை முன்னேற்ற உறுதி எடுப்போம்.

கடந்த கால சவால்களை தைரியமாக எதிர்கொண்டு,எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்தஒரு வளமான இலங்கையை உருவாக்குவது நம் அனைவரின் பொது பொறுப்பாகும் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...