Date:

நிதி நெருக்கடியில் தவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதி நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதுடன், இது ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களைச் செயற்படுத்துவதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குட்டெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலை தொடருமானால், எதிர்வரும் ஜூலை மாதமளவில் அமைப்புக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

193 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட நாடுகள் தமக்குரிய கட்டாயப் பங்களிப்புத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நிதி விதிகள் மற்றும் நடைமுறைகளைத் திருத்துவதற்கு இணங்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

இல்லையெனில், ஐக்கிய நாடுகள் சபையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடங்கும் கடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை...

உண்ணாவிரதப் போராட்டத்தில் சஜித்

தங்களைக் கல்விச் சேவையில் உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு...

தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சி…

உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச...