விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) காலை அவர் பயணித்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட தீவிர மீட்பு நடவடிக்கைகளின் போதே, அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வர் அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியப் பிரதமர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.






