ரீ.எல்.ஜவ்பர்கான்
நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆறு வழக்குகள் நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் செவ்வாய்க்கிழமை (27) அன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
முகநூல் சமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆறு வழக்குககள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன். அந்த ஆறு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இவ்வழக்குகளில் எதிராளிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகள், இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான், சப்ரின் சலாகுதீன் ,எம்.ஐ. இயாஸ்டீன், ஹனிபா பசில், ஜெசிம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.






