83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 2026 ஜனவரி 21 முதல் 23 வரை வெற்றிகரமாக நடைபெற்றது, இதில் இலங்கை விமானப்படை அணியினர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன்ஷிப்பை வென்று வரலாற்று இரட்டை வெற்றியைப் பதிவு செய்தது.

நாடு முழுவதிலுமிருந்து 10 முன்னணி அணிகள் இந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றன, இதில் 170 மல்யுத்த வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டியிட்டனர். ஆண்கள் பிரிவில், இலங்கை விமானப்படை அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றது, மொத்தம் 34.5 புள்ளிகளைப் பெற்றது, அதே நேரத்தில் பெண்கள் அணி தொடர்ச்சியாக 13வது முறையாக 51 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது.

போட்டியின் முடிவில் விருது வழங்கும் நிகழ்வு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ. சுனில் குமார கமகே அவர்களின் பங்கேற்ப்பில் 2026 ஜனவரி 23, அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விமானப்படை விளையாட்டு இயக்குநர் எயார் கொமடோர் பிரபாத் திசாநாயக்க, தேசிய மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவர் எயார் கொமடோர் எரந்திக குணவர்தன மற்றும் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.








