Date:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை தட்டிப்பறித்த சிங்கக் குட்டிகள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறையில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிகப்படியாக குசல் மென்டிஸ் 117 பந்துகளுக்கு 93 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 53 பந்துகளுக்கு 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

 

இதன்படி 272 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபடியாக பென் டகேட் 76 பந்துகளுக்கு 62 ஓட்டங்களையும், ஜோ ரூட் 90 பந்துகளுக்கு 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி,19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...

Breaking சொரணாதோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம்

பதுளை - சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண்...