சு்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.
இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் மூன்று போட்டிகளைக் கொண்டுள்ளது.
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 (20/20) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதலாவது போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.






