Date:

வளியின் தரம் குறைவு! | முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்..!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் செவ்வாய்க்கிழமை (21) தரம் குறைந்துள்ளது.

இன்றையதினம் காலை நிலவரப்படி, பின்வரும் பகுதிகளில் வளியின் தரச் சுட்டெண் (AQI) ஆரோக்கியமற்ற (Unhealthy) நிலையை எட்டியுள்ளது:ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, புத்தளம் மற்றும் காலி ஆகிய இடங்களில் வளியின் தரம் குறைந்துள்ளதால், பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பின்வரும் உணர்திறன் மிக்கவர்கள் (Sensitive Groups) அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஆஸ்துமா அல்லது இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள். சுவாசக் கோளாறுகள் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். வெளியில் செல்லும்போது தகுந்த முகக்கவசங்களை (N95 போன்றவை) அணிவது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...