இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (21.01.2026) நேற்றையதினத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது,
பெரும்பாலான வங்கிகளில் விற்பனை விகிதம் ரூ. 312 ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 306.90 ஆகவும், விற்பனை விலை ரூ. 311.65 ஆகவும் மாறாமல் உள்ளது.
NDB வங்கியில், கொள்முதல் விகிதம் ரூ. 306.25 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 312.75 ஆகவும் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 306.19 ஆகவும், விற்பனை விலை ரூ. 312.94 ஆகவும் குறைந்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 304.24 மற்றும் ரூ. 312.75 ஆகக் குறைந்துள்ளன.







