ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் டேட்சுயா யாமாகாமிக்கு (Tetsuya Yamagami) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றரை ஆண்டுக்கு முன் தேர்தல் பிரசார உரை ஆற்றிக்கொண்டிருந்த அபேயை யாமாகாமி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
சம்பவ இடத்திலேயே யாமாகாமி கைதுசெய்யப்பட்டார்.வழக்கு விசாரணை சென்ற ஆண்டு தொடங்கியபோது யாமாகாமி கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
எனினும் ஜப்பானின் சட்ட நடைமுறையில், ஒருவர் குற்றத்தை ஒப்புக்கெண்டாலும் வழக்கு விசாரணை தொடரும்.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.






