இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.
அந்த அறிவித்தல் பின்வருமாறு அமைகின்றது.
” உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2026 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை (புதன்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2026 புதன்கிழமை 21 ஆம் திகதி ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதத்தின் 01 ஆம் பிறை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.”








