இந்தியாவின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணைக்காக நாளை டெல்லிக்குச் செல்லவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட பலரிடம் மத்திய புலனாய்வு பணியகம் விசாரணை நடத்திய நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்துவதற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதற்கமைய, நாளை காலை தனி வானூர்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டெல்லி செல்லவுள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட டெல்லி காவல்துறை, டெல்லியில் விஜய் செல்லும் இடங்களிலும் தங்கும் இடங்களிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.






