தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதன்படி, மன்னார் மாவட்டத்தின், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வேலனை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதுடன், மானிப்பாய் மருதாணி ஆலயத்தில் இடம்பெறும் பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ஜனாதிபதி அத்துமீறிய இந்தியக் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தீர்வுதர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.பி.சுப்பிரமணியம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.






