Date:

நான் இந்த பொறுப்பில் இருப்பதற்கு எனக்குக் கிடைத்த கல்வியே காரணம் | கல்வியை நான் ஒருபோதும் அழிக்க மாட்டேன்! – ஜனாதிபதி

பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த கல்வி முறை மாற வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, ​​பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் பரவுவகதாக அவர் குறிப்பிட்டார்.

இலவசக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், ​​அதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த முறையும் அவ்வாறுதான். இது ஒரு சிறந்த கல்வி சீர்திருத்தம், நம் பிள்ளைகளைப் பராமரிக்கும் கல்வி. நம் பிள்ளைகளை உலகத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய கல்வி முறை. 

மேலும், நம் பிள்ளைகள் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற வழிவகுக்கும் ஒரு கல்வி முறை. இயந்திரங்களை உருவாக்கும் அல்லது கருணை, ஆன்மீகம் அற்ற பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, மதத் தலைவர்களை அறியாத பிள்ளைகளை உருவாக்கும் கல்வி அல்ல. அத்தகைய கல்வியினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.
இந்தக் கல்வி முறை கருணை, மனப்பாங்கு மற்றும் இரக்க குணம் கொண்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு கல்வி முறையாகும். யார் என்ன சொன்னாலும், அந்தக் கல்வி சீர்திருத்தங்கள் நமது கிராமங்களில் உள்ள அப்பாவி பெற்றோரின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கும்.

அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடடுவோம். நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதை உங்களுக்கு கூறுகிறோம். நாம் கல்வியை அழிக்கிறோம் என்று இங்கே உள்ள யாராவது நம்புகிறீர்களா? நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.
நாம் தூரப்பிரதேச கிராமங்களில் பிறந்தோம். கல்வியின் மூலம் குறிப்பிட்ட இடம் நமக்குத் கிடைத்ததால் இன்று இந்தப் பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இல்லையெனில், எங்கள் குடும்பப் பின்னணி, எங்கள் கிராமப் பின்னணி எங்களை இங்கு கொண்டு வந்திருக்காது. கல்விதான் எங்களுக்கு வழி வகுத்தது.
எனவே, தொலைதூர கிராமங்களில் பிறந்த நாம் முன்னேறுவதற்கு கல்வி வழி வகுத்தால், அந்தக் கல்விக்கு அழிவுகரமான பாதையை நாம் அமைக்க மாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொங்கல் தினத்தில் ஜனாதிபதி வடமாகாணம் பயணம்

தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

EPF பணம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை...

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) அமைப்பினர் மீது அமெரிக்கப் படைகள் நேற்று...

தாழமுக்கம் வலுவிழக்கிறது

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி...