Date:

’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ உடைந்து சிதறும்’

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ஐரோப்பிய நாடான டென்மார்கின் கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி பெற்ற பகுதியாக கிரீன்லாந்து செயல்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தீவு ஆகும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீவு அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

 

இதுகுறித்து டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கருத்து தெரிவிக்கையில்,

 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நேட்டோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்காவும் டென்மார்க்கும் இடம் பெற்றுள்ளன. நேட்டோ கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின்படி உறுப்பு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தக்கூடாது. ஏதாவது ஓர் உறுப்பினருக்கு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த நேட்டோ நாடுகளும் களமிறங்கும்.

 

தற்போது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவு அமெரிக்காவுக்கு தேவை என்று ட்ரம்ப் கூறுகிறார். இது நேட்டோ கூட்டமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிரானது. இதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். வெனிசுலா நாட்டுடன் கிரீன்லாந்தை ஒப்பிட முடியாது. ஒரு வேளை, கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்??

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை…

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை... மத்திய கிழக்கில் பதற்றம் என்பதால் எரிபொருள்...

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

மத்திய கிழக்குக்கான பத்து விமானங்களை ரத்து

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...