Date:

நாளை நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துதல், மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல் என்பன இவ்வாறு தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

 எவரேனும் ஒருவர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படுவார்களாயின், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாவார்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகளை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 2362 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை இலங்கை வழியாக ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம்,...

லண்டனில் திறக்கப்பட்ட பலஸ்தீன தூதரகம்!

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர்...

மோசமான காலநிலை | யாழ் மாவட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும்...

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுப்பு!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை...