இயற்கை பேரழிவுகள் ஏற்படுத்திய துயரங்களும், இழப்புகளும் மனித மனங்களை ஆழமாக பாதித்த இந்த காலகட்டத்தில், அவற்றை தாண்டி மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்பும் உறுதியும் நம்பிக்கையும் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய தருணமாக இந்த புத்தாண்டு அமையட்டும் என்று அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸின் முகாமைத்துவ பணிப்பாளர் கல்வியலாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவித்துள்ளார்.
2026 புது வருட வாழ்த்து செய்தியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் =
இழப்புகள் கற்றுத் தந்த பாடங்களை மனதில் கொண்டு,
வலி கடந்த அனுபவங்களை வலிமையாக மாற்றி,
ஒற்றுமை, அன்பு, மனிதநேயம் ஆகியவை சமூகத்தின் அடையாளமாக திகழ,
புதிய வாழ்வின் வாசலைத் திறக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு உருவாகட்டும்.
துன்பங்களால் சோர்ந்த மனங்களுக்கு ஆறுதலையும்,
எதிர்காலம் குறித்த அச்சங்களைத் தாண்டி நம்பிக்கையையும்,
உழைப்புக்கு பயன் தரும் நாள்களையும் இந்த ஆண்டு அனைவருக்கும் வழங்கட்டும்.
இயற்கையுடன் இணைந்து வாழும் உணர்வோடு,
ஒற்றுமையையும் பரஸ்பர அக்கறையையும் வளர்த்து,
புதிய தொடக்கங்களுக்கான அடித்தளமாக இந்த புத்தாண்டு அமைய வாழ்த்துகிறோம் என்றும்
அனைவருக்கும் இனிய, அமைதியான, நம்பிக்கையூட்டும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






