2026 ஆம் ஆண்டு புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை தலைமையகத்தில் சர்வ மத வழிபாடுகளுடன் இலங்கை விமான படையின் 75 ஆவது வருட பூர்த்தியினை குறிக்கும் புதிய இலச்சினை விமானப்படை தளபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது இலங்கை விமானப்படை தளபதியினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன் விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களையும் இதன் போது அனைவருக்கும் தெரிவித்தார் மேலும் எதிர்வரும் 2026 மார்ச் 02ம் திகதி அன்று வரவிருக்கும் இலங்கை விமானப்படையின் 75 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் புதிய இலட்சினையும் விமானப்படை தளபதி திறந்து வைத்தார். இந்த சின்னம் இலங்கை விமானப்படையின் பெருமைமிக்க வரலாற்றையும் அதன் எதிர்கால தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது. இந்தச் சின்னமானது எதிர்வரும் இலங்கை விமானப்படையின் 25 ஆவது வருட பூர்த்தியின் முதன்மை சின்னமாக பயன்படுத்தபடவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் சிவில் ஊழியர்களும் பங்குபற்றினர்.






