எதிர்காலத்தில் தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபடவுள்ளதாக எண்ணெய், துறை முகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.
அதன்படி நேற்று பிற்பகல் ஏனைய தொழிற்சங்கங் களுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபை, துறைமுகம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
