Date:

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமி சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திங்கட்கிழமை (29) அன்று ஈடுபட்டனர்.

அந்த வகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதோடு, குறித்த மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு இதன்போது மக்களால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. அந்தவகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாவலப்பிட்டியில் குண்டுப்புரளி

நாவலப்பிட்டியில் உள்ள பஸ்பாகே கோரல பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறை உட்பட,...

பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், எரிபொருள், பெட்ரோலியம், எரிவாயு விநியோகம் ஆகிய சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக...

வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்புரளி…

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர்...