முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து, 2026 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கு திணைக்களத்தில் பதிவு செய்துள்ள களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கான
கருத்தரங்கு 2025 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஜாமிஆ நளீமியா ADRT கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜாமீஆ நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷேக் அறபாத் கரீம் நளீமி அவர்களால் ஹஜ் தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டது.
சவூதி அரேபியாவில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளும் பயணம் தொடர்பான அறிவுரைகள் பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கணக்காளர் எஸ்.எல்.எம். நிப்ராஸினால் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டதோடு,
திணைக்கள உத்தியோகத்தர்களான கே.ஏ.சப்ரி,
எம்.ஐ.கியாஸ், எஸ்.எம்.ஜாவித், எம்.ரமீஸ் மற்றும் ஏ.சீ.எம். ரியாஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது அதிகளவிலான யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இக் கருத்தரங்கில் 2026 ஆம் ஆண்டு ஹஜ் செல்லவுள்ள யாத்திரிகர்களுக்கு ஹஜ் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், சவூதி அரேபியாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பயணத்துடன் தொடர்புடைய தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
இறுதியாக முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் முப்தி முர்சி நன்றியுரை நிகழ்த்தினார்.






