கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிப்பு.
2019 ஆம் ஆண்டு பிரபல பாதாள உலகக் குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, ஒரு நவீன ரகத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்த போது, அது 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது என்பது உறுதியானது.
தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு ஒரு பாதாள உலகக் கும்பலின் கைக்குச் சென்றது என்பது குறித்து சிஐடியினர் கேட்ட கேள்விகளுக்கு டக்ளஸால் முறையான விளக்கங்களை அளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈபிடிபி (EPDP) கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, பாதாள உலகக் கும்பலுக்கு துப்பாக்கி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வெள்ளிக்கிழமை(26) கைது செய்யப்பட்டுள்ளார்.






