திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த பாடசாலைகளின் சில வகுப்புக்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொது சுகாதார வைத்திய காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர் அனுர விஜெமுனி தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம தெபரவெவ ஜனாதிபதி கனிஷ்ட வித்தியாலயத்தின் மூன்று மாணவர்கள் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதன் காரணமாக அந்த பாடசாலையின் இரண்டு வகுப்புக்கள் மூடப்பட்டன. மேலும் திஸ்ஸமஹாராம எல்லகல ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதைத் தொடந்து அப்பாடசாலையின் இரு வகுப்புக்களும் இவ்வாறு மூடப்பட்டன.
இந்நிலையில், குறித்த வைரஸ் பரவலானது ஏனைய மாணவர்களுக்கும் பரவியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.