குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, அதிகாலை 4.30 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் மற்றும் மையம் குறித்த மேலதிக தொழில்நுட்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் மக்கள் சற்று அச்சமடைந்த போதிலும், இதுவரை உயிர்ச் சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
குஜராத்தின் கட்ச் பிராந்தியமானது அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் அடிக்கடி சிறியளவிலான நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நிர்வாகம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.






