34வது ‘FACETS Sri Lanka’ கண்காட்சி, 2027 ஜனவரி இலங்கையில் நடைபெறும்

FACETS Sri Lanka 2027: இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 34ஆவது ‘FACETS Sri Lanka’ கண்காட்சி, 2027 ஜனவரி 4 முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பு, ‘Cinnamon Life at City of Dreams’ இல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் நாட்டின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இலங்கையின் தனித்துவமான நீல இரத்தினக்கற்கள் (Sapphires) மற்றும் நவீன ஆடம்பர ஆபரணங்களை (Luxury Jewellery) காட்சிப்படுத்துவதற்காக விசேட பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், Sapphire Night, Story Corner, Power Breakfast, Mine Tour மற்றும் Port City Tour உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இதில் ஒன்றுகூடவுள்ளனர்.

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை (EDB) மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை (NGJA) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இக்கண்காட்சி முன்னெடுக்கப்படுகிறது. துறையின் தரநிலைகளைப் பேணுவதிலும் சர்வதேச சந்தைகளுடன் இணைப்பதிலும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இக்கண்காட்சியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திகதிகளையும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அறிவித்துள்ளது. இதன்படி, 2028இல் ஜனவரி 5-7 வரையும், 2029இல் ஜனவரி 4-6 வரையும், 2030இல் ஜனவரி 6-8 வரையும் இக்கண்காட்சி நடைபெறும். இலங்கையின் பாரம்பரியம், கைவினைத்திறன் மற்றும் நவீன புத்தாக்கங்களை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு தளமாக FACETS அமையும் என அதன் அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

போட்டித்தன்மை வாய்ந்த செலவு காரணி கார்பன் குறைப்பை சந்திக்கும் போது: Teejayஇன்...

உலகளாவிய ஜவுளித் துறையில் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், Teejay Lanka PLC நிறுவனம் தனது Abhivarah 2030 சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உத்தியின்...

கல்வித் துறையில் கால்பதிக்கும் ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ்!

விவசாயம், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளில் தடம் பதித்துள்ள முன்னணி வணிகக் குழுமமான ஏ.எச்.சி (AHC) குரூப் ஆஃப் கம்பெனிஸ், தற்போது...