Date:

தித்வா புயல் – 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை அறிவித்த இந்தியா!

<span;>டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

<span;>இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிப்புக்குள்ளான வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் புனரமைத்தல், முழுமையாக அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளின் மறுசீரமைப்பு என்பன அதில் அடங்குகின்றன.

அத்துடன் பேரிடரை எதிர்கொள்ளுதல் மற்றும் அதற்கான தயார்நிலைத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை விடுமுறையில் திருத்தம்

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்,...

உச்சம் தொட்ட தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை...

திடீரென கொழும்பு முழுவதும் குவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்

நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர். நேற்று...