2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் பணவீக்க விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய 2025 ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக பதிவாகியிருந்த நாட்டின் முதன்மை பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் 2.4% ஆக குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஒக்டோபர் மாதத்தில் 4.1% ஆக பதிவாகியிருந்த உணவு பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் 3.6% ஆக குறைவடைந்துள்ளது.
அத்துடன், 2025 ஒக்டோபர் மாதத்தில் 1.5% ஆக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், 2025 நவம்பர் மாதத்தில் மாற்றமின்றி 1.5% ஆகவே காணப்படுவதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.






