Date:

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது.

இன்று (12) நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை $4,266 ஆக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (12) நிலவரப்படி, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் (11) உடன் ஒப்பிடும்போது ரூ.3,000 அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 312,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இதன் விலை 309,200 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, நேற்று 336,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 339,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...